Home நாடு “பூஜாங் பள்ளத்தாக்கை அடுத்து கம்போங் செட்டியும் பாதிக்கப்படும் அபாயம்” – வேதமூர்த்தி அச்சம்

“பூஜாங் பள்ளத்தாக்கை அடுத்து கம்போங் செட்டியும் பாதிக்கப்படும் அபாயம்” – வேதமூர்த்தி அச்சம்

435
0
SHARE
Ad

waythaமலாக்கா, டிச 18 – பூஜாங் பள்ளத்தாக்கில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சண்டி உடைக்கப்பட்டதையடுத்து, மலாக்காவிலுள்ள மற்றொரு பாரம்பரிய சின்னமான கம்போங் செட்டியும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி (படம்) அச்சம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1827 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 2002 ஆண்டு பாரம்பரிய ஸ்தலங்களாக அங்கீகரிக்கப்பட்ட மலாக்கா கம்போங் செட்டி மற்றும் முத்து மாரியம்மன் கோயிலுக்கு இடையில், 22 மாடிகள் கொண்ட கார் நிறுத்தும் வசதியோடு கூடிய தங்கும்விடுதி ஒன்று கட்டப்படவுள்ளதை அறிந்து திகைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த கட்டிடத்தால் பாதிக்கப்படவுள்ள அந்த இடம், கடந்த 2008 ஆம் ஆண்டு மலாக்காவில் உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப்பட்ட 3 பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் ஒன்று என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த புதிய கட்டிடங்களால் கோயிலின் கட்டமைப்பு சேதப்படுவதோடு, கம்போங் செட்டியின் பாரம்பரியத் தன்மையும் பாதிக்கப்படும் என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.