Home கலை உலகம் நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!

நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!

641
0
SHARE
Ad

kullamani 300-200

சென்னை, டிசம்பர் 26- கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் குள்ளமணி சென்னையில் நேற்று இரவு 9 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு (வயது 65).

இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 9 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

அவருடைய உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (வியாழக்கிழமை) உடல் அடக்கம் நடக்கிறது.