Home கலை உலகம் நடிகை சுசித்ரா சென் கவலைக்கிடம்

நடிகை சுசித்ரா சென் கவலைக்கிடம்

584
0
SHARE
Ad

susistra sen

கொல்கத்தா,டிசம்பர் 31- பழம் பெரும் நடிகை சுசித்ரா சென், மூச்சு திணறல் ஏற்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சுசித்ரா சென் வயது 82. இவர் கொல்கத்தாவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தனிமையில் வசித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்ட இவரை கடந்த 23ம் தேதி அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு துடித்தார். இதனால் இதயம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இவர் கடந்த 1955ம் ஆண்டில் வெளியான ‘ தேவதாஸ்‘ என்ற இந்திப்படத்தில் திலீப்குமாருடன் கதாநாயகியாக நடித்தார். பல இந்திப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். அதனால் மத்திய அரசு 2005ம் ஆண்டு தாதசாகேப் பால்கே விருது இவருக்கு வழங்கியது. ஆனால் அதை வாங்க சுசித்ரா சென் மறுத்து விட்டார்.