Home நாடு துரித உணவுக்கடைகளில் இனி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த முடியாது!

துரித உணவுக்கடைகளில் இனி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த முடியாது!

691
0
SHARE
Ad

Fast-Food-Pic3புத்ரஜெயா, ஜன 7 –  ‘பாஸ்ட் புட்’ என்று அழைக்கப்படும் துரித உணவுக் கடைகளில் இனி வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாது என்று உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியர்கள் பலர் அந்த வேலையில் ஈடுபட ஆர்வமுடன் இருப்பதால் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இனி அதில் அமர்த்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான குழு இன்று கூடி இம்முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தகக்து.