Home வாழ் நலம் முக அழகை கூட்டும் தக்காளி

முக அழகை கூட்டும் தக்காளி

705
0
SHARE
Ad

tomato

கோலாலம்பூர், ஜன 20 – வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் தக்காளி பெண்களின் அழகை கூட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

1. ஒரு சிலருக்கு முகத்தில் எப்பொதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும். இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

#TamilSchoolmychoice

2. தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

3. உருளைகிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.

4. சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இதனை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.