Home கலை உலகம் ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த பாதிரியார்!

ரஜினிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்த பாதிரியார்!

614
0
SHARE
Ad

rajini-3

சென்னை, ஜன 30 – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி அவரது வீட்டில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

சர்வமதங்களிலும் நம்பிக்கை கொண்ட சூப்பர் ஸ்டார் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி கிறிஸ்தவ பாதிரியார் சாமி தங்கையா இந்த பிரார்த்தனையை நடத்தினார்.

#TamilSchoolmychoice

rajini-2

பாதிரியார் சாமி தங்கையா திருப்பதியிலிருந்து ரஜினி திரும்பிய மறுநாள் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தார். பிறகு ரஜினியின் நெஞ்சில் கைவைத்து இறை ஆசிகூறி, சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். அந்தப் பிரார்த்தனையின்போது மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டார் ரஜினி. அவருக்குள் விதைக்கப்பட்ட விதையான இறைவனின் ஆசிகள் மேலும் மேலும் வளர்ந்து வளங்களைத் தரும் என பிரார்த்தனை செய்தார் சாமி தங்கையா.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் உடல் நிலை சரியில்லாத போது, சென்னை மருத்துவமனையிலிருந்து திருவான்மியூரில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று சூப்பர் ஸ்டார்  பிரார்த்தனை செய்துக் கொண்டது  குறிப்பிடதக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்போது அதிகமாக வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. நெருக்கமான நண்பர்கள் வீடுகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்று வருகிறார்.