ஜோகூர் பாரு, பிப் 13 – சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா செய்வதற்கு அபராதம் எதுவும் விதிக்கத் தேவையில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகாதீர் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கையில், “அவர்கள் விருப்பப்படி ராஜினாமா செய்வதாக இருந்தால் செய்யட்டும். அவர்கள் ராஜினாமா செய்ததில் காரணம் உள்ளதா? இல்லையா? என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா செய்வதற்கு அபராதம் விதிக்கலாமா என்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்கு மகாதீர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இது போன்று காரணமின்றி ராஜினாமா செய்யும் போக்கு தற்போது மலேசியாவில் நிலவி வருகின்றது. இது ஒரு முறையற்ற செயல் என்பது தேர்தல் ஆணையத்தின் கருத்து .
ஆனால் மகாதீர் இதன் முடிவை மக்களிடமே விட்டுவிடும் படி தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளார்.