Home இந்தியா 7 பேரை விடுவிக்கும் அதிமுக அரசின் முடிவு பற்றி மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்?- கபில்...

7 பேரை விடுவிக்கும் அதிமுக அரசின் முடிவு பற்றி மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்?- கபில் சிபல்

453
0
SHARE
Ad

21-kapil-sibal-question1-300டெல்லி,பிப் 21 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான தாக்குதல் தனிப்பட்ட நபர் மீதான தாக்குதல் அல்ல மாறாக இந்திய குடியரசு மீதானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் முடிவு குறித்து மோடி ஏன் மௌனமாக உள்ளார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான தாக்குதல் தனிப்பட்ட நபர் மீதான தாக்குதல் அல்ல மாறாக இந்திய குடியரசு மீதானது என்றார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் தீவிரவாதம் குறித்த பிரச்சனை எழுப்பும் எதிர்கட்சி அதிமுக அரசின் முடிவு குறித்து ஏன் மௌனமாக இருக்கிறது என்று சிபலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று மோடியை கேட்க விரும்புகிறேன். இது தவறான சிக்னல் ஆகும். தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் எந்த கட்சியும் இரட்டை நிலையை கையாளக் கூடாது.

ஆனால் தீவிரவாதம் என்று வருகையில் இந்தியாவில் அரசியல் கட்சிகளும், அரசுகளும் இரட்டை நிலையை கையாள்வது துரதிர்ஷ்டமானது. சில இடங்களில் போலி என்கவுண்ட்டர்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அதே சமயம் சில அரசியல் கட்சிகள் தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக நம் முன்னாள் பிரதமரை கொன்றவர்களை எதிர்த்து என்றார்.