Home 13வது பொதுத் தேர்தல் மூன்றில் இரண்டு பங்கு கொடுக்கக் கூடாது

மூன்றில் இரண்டு பங்கு கொடுக்கக் கூடாது

613
0
SHARE
Ad

dr.paalபெட்டாலிங் ஜெயா, பிப்.14- மலேசியர்கள் தங்கள் வாக்குகளைப் பெறுவதற்கு போராடும் எந்தக் கூட்டணிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுக்கக் கூடாது என்பதற்கு மிகவும் வலுவான காரணத்தை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்ததாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால்  தான் சீ இங் தெரிவித்தார்.

காரணம், அத்தகைய பெரும்பான்மை மெர்டெக்கா அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மலேசியர்களிடமிருந்து பறிப்பதற்கு வழி வகுத்து விடும் என மேலும் அவர் சொன்னார்.

தேசியப் பாதுகாப்பு அரசமைப்பு மீது கடந்த வாரம் நடந்த ஆய்வரங்கு ஒன்றில் மகாதீர் குறிப்பிட்ட கருத்துகள் பற்றி ஆயர் பால் தான் கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

பி.என்.னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொடுப்பதின் மூலம் அரசாங்கம் அரசமைப்பைத் திருத்தி அரசாங்கத்தைக் குறை கூறுகின்ற டத்தோ அம்பிகா சீனிவாசன் போன்றவர்களுடைய குடியுரிமையை பறிக்க முடியும் என மகாதீர் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, டாக்டர் மகாதீர் வெளியிட்டு வருகின்ற அபத்தங்கள் குறித்து மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர்.

மேலும் எந்த ஒரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொடுக்கக் கூடாது என்பதனையும் எந்த ஒரு தலைவரும் நீண்ட காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கக் அனுமதிக்கக் கூடாது என்பதனையும் உணர வேண்டும்.

ஏனென்றால்,  இந்த இரண்டு சூழ்நிலைகளும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கும் என எடுத்துரைத்தார்.