Home நிகழ்வுகள் ‘கழகச் சுடர்’ ஆலன் மணியத்திற்கு இரங்கல் கூட்டம்

‘கழகச் சுடர்’ ஆலன் மணியத்திற்கு இரங்கல் கூட்டம்

688
0
SHARE
Ad

malasiya-dravida-kalakamபெட்டாலிங் ஜெயா, பிப்.14- கடந்த 18.1.2013 ஆம் நாள் மறைந்த, மலேசிய திராவிடர் கழகம் பெட்டாலிங் ஜெயா பாரு கிளையின் துணைச் செயலாளர், ‘கழகச் சுடர்’ ஆலன் மணியம் இரங்கல் கூட்டம் 17.2.2013 ஞாயிற்றுகிழமை, மாலை 6.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

நன்கு அறிமுகமான தோழர் ஆலன் மணியம் கடந்த காலங்களில் தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழர் சங்கம், தொழிலாளர் கூட்டுறவு நாணயம் சங்கம், பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், அரசியல் போன்ற அமைப்புகளில் பணியாற்றி இதுவரையில் ம.தி.க பெட்டாலிங் ஜெயா பாரு கிளையில் பொறுப்பேற்று வந்துள்ளார்.

இந்த இரங்கல் கூட்டத்திற்கு அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று இரங்கல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு நாக. பஞ்சு அனைவரையும் அழைக்கிறார். மேல் விவரங்களுக்கு: 012 267 9180.