Home கலை உலகம் ‘வனயுத்தம்’ பட வழக்கு

‘வனயுத்தம்’ பட வழக்கு

501
0
SHARE
Ad

veerapan-wifeஇந்தியா, பிப்.14- சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை “வனயுத்தம்” என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் சினிமா படமாகியுள்ளது.

வீரப்பன் வேடத்தில் கிஷோர் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜுனும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமியும் நடித்துள்ளனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை எதிர்த்து முத்துலட்சுமி ஏற்கனவே சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

முத்துலட்சுமிக்கு படத்தை திரையிட்டு காட்டும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. படத்தை பார்த்த அவர் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை பட்டியலிட்டு அவற்றை நீக்கவேண்டும் என்றார். நீதிமன்றமும் சர்ச்சைக்குரிய காட்சிகளை  நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவிட்டது.

இந்நிலையில், முத்துலட்சுமி  ‘வனயுத்தம்’ படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்க கோரி உச்ச நீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். மேலும், படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள  ‘உண்மை கதை’ என்ற வாசகத்தையும் நீக்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.