லண்டன், பிப்.15- இத்தாலியில் உள்ள பென்மெக்கானிகா என்ற நிறுவனம், ராணுவத் தளவாடங்கள் மற்றும் விமானங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனமாகும். இதன் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனம், ஹெலிகாப்டர் களை தயாரிக்கிறது. இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.4,000 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஆர்ட ரை பெறுவதற்காக இந்தியர்கள் சிலருக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இத்தாலியில் பென்மெக்கானிகா நிறுவன தலைவர் ஜியுசெப்பி ஓர்சி கைது செய்யப்பட்டார். இது குறித்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் பெர்லோஸ்கோனி நேற்று கூறுகையில், ‘சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கு லஞ்சம் மிக அவசியமாகி விட்டது. எல்லா இடத்திலும் லஞ்சம் உள்ளது. இதை குற்றமாக எடுத்து கொள்ள கூடாது. ஓர்சியை கைது செய்தது தவறு. இதனால், இத்தாலியின் ஏனி, ஏநெல் போன்ற பெரிய கம்பெனிகளிடம் இனி யாரும் ஒப்பந்தம் செய்ய வர மாட்டார்கள்’ என்றார்.