Home இந்தியா பிரச்சாரக் கூட்டத்தில் வம்பிழுத்த வாலிபரை நக்மா அறைந்தார்!

பிரச்சாரக் கூட்டத்தில் வம்பிழுத்த வாலிபரை நக்மா அறைந்தார்!

511
0
SHARE
Ad

nagma_storyமீரட், மார்ச் 28 – முன்னாள் நடிகை நக்மா, உத்தர பிரதேச மாநிலம், மீரட்தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக இந்த தேர்தலில் களத்தில் இறங்கி உள்ளார்.அவர் வேட்பாளராக களம் இறங்கியது முதல் முத்தப் பிரச்சனையில் சிக்கி, தகவல் ஊடகங்களில் திடீரென பிரபலமாகி விட்டார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் அவரைக், கட்டிப் பிடித்து முத்தமிட்டதாக, படத்துடன் செய்தி வெளியானது. ஆனால், நக்மா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், மீரட்டில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், நக்மாவின் அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், அவரிடம் சில்மிஷம் செய்தார்.

அதனைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நக்மா, ஒரு கட்டத்தில் வாலிபரை பளார் என்று கன்னத்தில்அறைந்தார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

நக்மா ரஜினியுடன் பாட்ஷா படத்திலும், மேலும் பல தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.