Home உலகம் MH370 – விமானப் பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் உருக்கமான பிரார்த்தனை!

MH370 – விமானப் பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் உருக்கமான பிரார்த்தனை!

662
0
SHARE
Ad

missing_plane_011பெய்ஜிங், ஏப்ரல் 9 – மாயமான மாஸ் MH370 விமான மறைந்து நேற்றுடன் சரியாக ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மெட்ரோபார்க் தங்கும் விடுதியில் கூடிய விமானப் பயணிகளின் உறவினர்கள், உருக்கமான பிரார்த்தனை ஒன்றை நடத்தினர்.

லிடோ விடுதியின் சிவப்புக் கம்பளவிரிப்பில் நேற்று அதிகாலை விமான வடிவம் ஒன்றினைச் சூழ்ந்த இதய வடிவத்தில் மெழுகுவர்த்திகளை அவர்கள் ஏற்றினர். அதனுள் எம்ஹெச்370 என்ற வடிவிலும் மெழுவர்த்திகள் ஏற்றப்பட்டன.

பின்னர் அதனைச் சுற்றி அமர்ந்த அவர்களில் சிலர் அமைதியாகவும், சிலர் பிரார்த்தனை செய்த வண்ணம் மௌனமாகவும் அமர்ந்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்த பிரார்த்தனை பற்றி அங்கு வந்திருந்த ஸ்டீவ் வாங் என்ற உறவினர் தாங்கள் கடந்த 31 நாட்களாக அவர்களுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இனி எதையும் இழந்துவிட்ட உணர்வோ, காயமோ, விரக்தியோ தோன்றுவதற்கு இல்லை, இனி அழுவதற்கும் ஒன்றும் இல்லை என்று அவர் அங்கு வந்திருந்தவர்களிடம் கூறினார்.

மாயாமான விமானம் தொடர்பான மர்ம முடுச்சுகள் அவிழ்க்கப்படாத நிலையில், பயணிகளின் உறவினர்கள் மட்டும் அல்லாது ஒட்டு மொத்த மலேசியாவும் விக்கித்துப்போய் உள்ளது.