இந்த திறன் கண்ணாடி, இரு வழிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடியின் அடிப்படை செயல் திறனில், ஆப்பிளின் மேக் மினி (Mac Mini) கணினியும், முகச்சாயலை அடையாளம் காணும் (Facial Recognition) மென்பொருளும் முக்கிய பங்குவகிக்கின்றன.
பயனாளர்கள் இந்த திறன் கண்ணாடியின் முன்பு சிரிக்கும் பொழுதோ, உணர்வுகளை வெளிப்படுத்து பொழுதோ, மேக் மினி கணினியின் மூலம் இயங்கும் முகச்சாயலை அடையாளம் காணும் மென்பொருள், உள்ளமைக்கப்பட்டுள்ள கேமராவை இயங்கச் செய்து புகைப்படம் எடுக்கின்றது.
இந்த S.E.L.F.I.E கண்ணாடியின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், புகைப்படம் எடுத்தவுடன் தானாகவே ‘ட்விட்டர்’ (Twitter) – ல் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. S.E.L.F.I.E கண்ணாடிகளின் செயல்பாடுகளை கீழ்காணும் காணொளி வழி காணலாம்.
http://youtu.be/80m_pC5ns7c