Home இந்தியா 65 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா

65 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா

486
0
SHARE
Ad

jeyaசென்னை, பிப். 15- தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஜெயலலிதா பேரவை சார்பில் 65 ஜோடிகளுக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

#TamilSchoolmychoice

அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் மகள் ஆர்த்தி பிரியதர்ஷினி-சிவகுமார், முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன் திவாகர் – காயத்ரி, ஆவடி நகர செயலாளர் தீன தயாளனின் மகன் கமல் என்ற கோவிந்தராஜுலு, சரண்யா ஆகியோர் திருமணங்களையும் நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு அலமாரி, மின் விசிறி, அரைக்கும் இயந்திரம், தலையணை, சூட்டடுப்பு,  சமையல் பாத்திரங்கள் உள்பட 65 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமக்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  பேருந்துகளில் வந்திருந்தனர். விழா நடைபெறும் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.