Home இந்தியா தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழை நீடிக்கும்

847
0
SHARE
Ad

rainசென்னை, பிப்.15- தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இரண்டு கால கட்டத்திலும் சரிவர பெய்யாததால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து விட்டன. நீர்நிலைகளும் வறண்டு வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தி¢ல் மீண்டும் மழை பெய்து வருகிறது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது, நேற்று இலங்கை அருகில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து விட்டது. லட்சத்தீவு அருகே உரு வான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நீடிக்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக நன்னிலத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

#TamilSchoolmychoice

சென்னையில் இன்று காலையில் பரவலாக மழை பெய்துள்ளது. வரும் 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் அனேக பகுதிகளில் மழை பெய்யும். 3 நாட்கள் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு ரமணன் கூறினார்.

சென்னையில் இன்று காலை வெயில் அடித்த நிலையில் திடீரென மதியம் 11 மணி அளவில் வானம் இருண்டு திடீரென மழை பெய்தது. வடபழனி, கிண்டி, வேளச்சேரி, மயிலாப்பூர், போரூர், எழும்பூர், நுங்கம் பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடி சென்றனர்.

பெருங்குடி, சோழிங்க நல்லூர், அடையார், திரு வான்மியூர், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, செம்மஞ்சேரி ஆகிய இடங்களில் இன்று காலை 10.30 மணி அளவில் திடீரென மழை கொட்டியது. சுமார் 30 நிமிடம் நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமப்பட்டனர். சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்ட கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் இன்று காலை 6 மணியில் இருந்து திடீர் மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட் படுத்தாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர லாற்று சிற்பங்களை குடை பிடித்தபடி சுற்றி பார்த்து வருகிறார்கள்.