Home உலகம் சீனாவில் பள்ளிக்கு அருகே பொழுதுபோக்கு மையம் தடை

சீனாவில் பள்ளிக்கு அருகே பொழுதுபோக்கு மையம் தடை

872
0
SHARE
Ad

beijingபீஜிங். பிப்.15- பீஜிங் சீனாவில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க, அந்நாட்டு அரசு, தடை விதித்திருக்கிறது.

சீனாவில், பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதில், அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அவற்றின் விவரம் வருமாறு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் இருந்து, பொழுதுபோக்கு மையங்கள் நீண்ட தொலைவில் அமைக்கப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

மேலும் நடனம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு, குறைந்த இடம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர்த்து, கிராமப்புறங்களில் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க, அரசின் கலாச்சார அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும். இவ்வாறு, அரசின் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.