டாக்கா, பிப்.16- வங்க தேசத்தில் ஒளிபரப்பப்பட்ட ஜப்பான் கேலிச்சித்திரப் படங்களுக்கு (கார்ட்டூன்) அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஜப்பான் மொழியில் தயாரிக்கப்பட்ட கேலிச்சித்திரப் படம் ஒன்று இந்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மொழியாக்கம் செய்யப்பட்ட கேலிச்சித்திரப் படமானது வங்க தேசத்தில் ‘கேபிள் ஆபரேட்டர்கள்’ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் கேலிச்சித்திரப் படங்களை ஒளிபரப்பு செய்யப்படுவது தடுக்கப்படும் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஹன்சுல் ஹக் தெரிவித்துளளார்.
ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த சட்ட வல்லுநர் ஷாரியர் ஆலம் என்பவர் கேபிள் டி.வியில் ஒளிபரப்பப்படும் ஜப்பான் நாட்டின் கேலிச்சித்திரப் படங்கள் குழந்தைகளிடையே எதிர் சிந்தனையை உருவாக்குவதாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அந்நாட்டு அரசு கேலிச்சித்திரப் படங்களுக்கு தடை விதித்துள்ளது.
மேலும் ஒளிபரப்பு செய்த கேபிள் ஆபரேட்டர்களுக்கும் விளக்கம் கேட்டு மனு அனுப்பப்பட்டுள்ளது.