ஈப்போ, பிப்.16- உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டில் இயற்கை மருத்துவத்தின் மகிமையை அறிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விளக்கக் கூட்டம் நாளை 17.2.2013 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4.00க்கு ஈப்போ, சிலிபின் வழி புனித லூர்து மாத பெர்னெட் மையத்தில் நடைபெறவுள்ளது.
இயற்கை மருத்துவம் மற்றும் இதய நோய், நீரிழிவு பற்றிய விளக்கமும் விவரங்களையும் பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் (படம்) விளக்கம் அளிப்பார்.
மருத்துவ சிகிச்சையையும் இலவச மருத்துவ ஆலோசனைகளையும் டாக்டர் ஆனந்த கிருஷ்ணனிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு, குமாரி சந்தியா 016-541595, டாக்டர் அகிலன் 012-3763577 அல்லது சகாயம் 016-5941303.