மே 20 – அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை கட்டுக்குள் வைத்தல் நல்லது.
* கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மொத்த கொழுப்பின் அளவு 200-க்கும் குறைவாக இருப்பது நல்லது. கெட்ட கொழுப்பின் அளவு 130-ம் குறைவாக இருப்பது நல்லது. நல்ல கொழுப்பின் அளவு 35-க்கு மேல் இருப்பது நல்லது.
* புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டும். புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்த்தல் வேண்டும்.
* மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சிலவற்றை அதாவது யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்ய வேண்டும்.
* சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி பயிற்சி) மேற்கொள்ள வேண்டும்.
* சமச்சீரான, நல்ல ஆரோக்கியமான உணவு முறைகள் தேவை. உணவை மருந்தைபோல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிட வேண்டியது இல்லை.
* கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணை குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் உணவே ஆரோக்கியமானது.
* மஞ்சள் கரு இல்லாத முட்டை, வேகவைத்த மீன், தோல் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.