நியூயார்க், மே 30 – அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி (Hewlett-Packard) இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 18% இலாபம் அடைதுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் அந்நிறுவனம் சுமார் 16,000 உழியர்களை வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.
ஹெச்பி நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு பற்றி அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேக் விட்மேன் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தை படிப்படியாக உயர்த்தி ஒரு நிலையான இடத்தை நோக்கி வடிவமைத்து வருகின்றோம். வாடிக்கையாளர்களையும், பங்குதாரர்களையும் மையமாகக் கொண்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இது போன்று சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.
இரண்டாம் காலாண்டில் ஹெச்பி இலாபத்தை அடைந்து இருந்தாலும், இது முந்தைய வருடத்தை விட 1% குறைவாகும். கடந்த வருடத்தில் இதே காலாண்டில், அந்நிறுவனம் 27.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இலாபம் அடைந்து இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள தொய்விற்கு, திறன்பேசிகள் மற்றும் டேப்லெட்களின் அசுர வளர்ச்சியே காரணமாகக் கூறப்படுகின்றது.
கடந்த 2012-ம் ஆண்டில், ஹெச்பி நிறுவனம் 34,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.