Home அவசியம் படிக்க வேண்டியவை முன்னாள் விடுதலைப் புலிகள் 40 பேருக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!

முன்னாள் விடுதலைப் புலிகள் 40 பேருக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!

631
0
SHARE
Ad

ltte-logoகொழும்பு, ஜுன் 7 – இலங்கையில் தனி ஈழ நாடு அமைக்க ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள், கடந்த 2009-ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த உச்சக்கட்டப் போரின் போது இலங்கை ராணுவத்தால் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஆயுதங்களை கைவிட்டு இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். மேலும் சிலரை இலங்கை அரசு கைது செய்தது.

இவர்களுக்கு இலங்கை அரசின் சார்பில், ராணுவத்தினரின் மேற்பார்வையில் மீள்வாழ்வு தொழிற்பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. இங்கு பயிற்சி பெற்ற 1,773 பேர்களுக்கு அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கிக்  கடன் வழங்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தவிர, முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளி நாடுகளில் வேலை பெற்றுத் தரும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இதன் முதல் கட்டமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தின் மூலம் 40 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என இந்த மீள்வாழ்வு பயிற்சி திட்டத்துக்கு ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ராணுவ மேஜர் ஜெனரல் ஜகத் விஜெதிலகே தெரிவித்துள்ளார்.