விடுதலைப் புலிகள் எந்த விதமான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருந்தது.
இதனை உள்துறை அமைச்சகம் நிராகரித்த நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்திடம் (Proscribed Organisations Appeal Commission) நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீடு செய்தது.
இதற்கு தீர்ப்பளித்த ஆணையம் விடுதலைப் புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது என தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தீர்ப்பின் அடிப்படையில், அறிக்கை வெளியிட்ட இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு டுவிட்டரில் ராஜபக்சே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.