Home கலை உலகம் மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை- அசின் விளக்கம்

மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை- அசின் விளக்கம்

621
0
SHARE
Ad

asinசென்னை, பிப்.20- நடிகை அசின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மூத்த நடிகர்களைவிட இளம் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிப்பதே எனக்கு வசதியாக உள்ளது என்று கூறியிருந்தார்.

தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் நடிப்பது சங்கடமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அசின் கொடுத்த பேட்டியானது  வயதான இந்தி நடிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் போன்ற மூத்த நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இவர்கள் அசின் மேல் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். அசினுக்கு இந்திப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இவர்கள் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அசின் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்கின்றனர்.

இதுகுறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் அளித்த பேட்டியில் எந்த உள்நோக்கமும் இல்லை. இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவது தவறு அல்ல. இதற்காக மூத்த நடிகர்களை அவமதிக்கிறேன் என்று வதந்தி பரப்பப்படுகிறது. வயதான கதாநாயகர்களை மதிக்கிறேன். நான் சொன்ன கருத்தை அவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிகைகள்தான் இந்த பிரச்சினையை பூதாகாரமாக்குகின்றன” என்று கூறினார்.