Home உலகம் மீனவர் வலைகள் மூழ்கடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்

மீனவர் வலைகள் மூழ்கடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்

591
0
SHARE
Ad

fishermanராமேஸ்வரம், பிப்.20- நடுக்கடலில் மீன்பிடித்த, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலையை, இலங்கை கடற்படையினர் வெட்டி கடலில் மூழ்கடித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 683 விசைப்படகில் மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டியடித்தனர்.

#TamilSchoolmychoice

இதனால், மீனவர்கள் உயிருக்கு பயந்து, கடலில் இழுபட்டு வந்த வலையை, வேகமாக இழுத்து படகில் வைத்து கொண்டிருந்த போது, தங்கச்சிமடம் ஆரோக்கியம், சேவியர் உள்ளிட்ட நான்கு பேரின் படகுகளை, இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.

பின்னர், “நீங்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை கண்டித்து, எங்கள் நாட்டில் மீனவர்கள் தொடர்ந்து, பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பலமுறை நாங்கள் எச்சரித்தும் ஏன் மீன்பிடிக்க வருகிறீர்கள்’ எனக்கூறி, படகில் இருந்த வலைகளை வெட்டி கடலில், மூழ்கடித்தனர்.

இதனால் ஒரு படகிற்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக, கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.