Home உலகம் உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

598
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 25 – இவ்வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி அனைத்துலக விமானப் போக்குவரத்துறையில் பல்வேறு விமான விபத்துகள் ஏற்பட்டு உலகமே பேரதிர்ச்சியில் உள்ளது.

இந்த மாதம் மட்டும் மூன்று வெவ்வேறு விமான விபத்துகளில் 465 பயணிகள் பலியாகியுள்ளனர். இது தவிர மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் எம்எச்370 -ன் கதி என்னவென்றும் இன்று வரை கண்டறியப்படவில்லை.

Haris Suleman 1

#TamilSchoolmychoice

(ஜூன் மாதம் உலக சாதனை புரிய புறப்படுவதற்கு முன் தனது தாயை கட்டி அணைக்கும் ஹாரிஸ்)

இந்நிலையில், உலக சாதனை புரிவதற்காக ஒற்றை இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் 30 நாட்களில் உலகை வலம் வர நினைத்த அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது இளைஞர், கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலில் விமானத்தோடு விழுந்து நொறுங்கி பலியாகியுள்ளார்.

Haris Suleman 2

(தனது தந்தை பாபருடன் ஹாரிஸ்)

ஹாரிஸ் சுலைமான் என்ற அந்த இளைஞர் தனது தந்தை பாபர் சுலைமானுடன், கடந்த ஜூலை 10 -ம் தேதி, இலங்கை, கொழும்பில் இருந்து புறப்பட்டு, 7 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் கோலாலம்பூர் சுபாங் விமான நிலையம் வந்தடைந்தார்.

ஹாரிஸுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தங்களது 30 நாட்கள் பயண இலக்கை அவரால் அடைய முடியவில்லை.

எனினும், ஹாரிஸ் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி, 15 நாடுகளில் உள்ள 25 முக்கிய நகரங்கள் வழியாக, சுமார் 41,843 கிலோமீட்டர் பயணம் செய்வது என்று முடிவெடுத்தார்.

3

இந்நிலையில், அமெரிக்காவின் சமோவா தீவில் இருக்கும் பாகோ நகரிலிருந்து விமானத்தை புறப்பட்ட ஹாரிஸின் விமானம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. என்றாலும் விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்த விபத்தில் ஹாரிஸ் மற்றும் அவரது தந்தை பாபர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Haris Suleman 3

(பசிபிக் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஹாரிஸின் உடல்)

ஹாரிஸின் இந்த சாதனை வெற்றி பெற்றிருந்தால், இதற்கு முன்பு 19 வயது இளைஞர் ஒருவர் 30 நாட்களில் உலகை வலம் வந்த சாதனையை ஹாரிஸ் முறியடித்திருப்பார்.