Home கலை உலகம் ராஜேஷ் படத்திற்கு தயாராகும் கார்த்தி!

ராஜேஷ் படத்திற்கு தயாராகும் கார்த்தி!

658
0
SHARE
Ad

karthiசென்னை, பிப்.20- ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வரவேற்பிற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் கார்த்தியை வைத்து படம் இயக்க போவதாக அறிவித்தார்.

கார்த்தியோ வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரியாணி படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் ராஜேஷ் படம் எப்போது துவங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் கார்த்தி – ராஜேஷ் இணையும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் கோபிச்செட்டிபாளையம் மற்றும் பழனி ஆகிய சுற்று வட்டாரங்களில் தொடங்குகிறது.பிரியாணியில் நடித்துக்கொண்டே, ராஜேஷ் படத்திலும் நடிக்க ஏதுவாக கால்ஷீட்டுகளை ஒதுக்கி உள்ளாராம் கார்த்தி.

#TamilSchoolmychoice

சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை போலவே முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் ராஜேஷ்.

அதுமட்டுமன்றி முந்தைய படங்களைப் போலவே சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமன் இத்திரைப்படத்தில் இசையமைக்க உளளார்.