Home கலை உலகம் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் அடுத்த படம்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் அடுத்த படம்

700
0
SHARE
Ad

Suryaசென்னை, ஜூலை 30 – தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் அடுத்தடுத்து கவனமுடன் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும், சரியான இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வெற்றிக் கொடி நாட்டுபவர் நடிகர் சூர்யா.

லிங்குசாமி இயக்கத்தில் அவரது அடுத்த படமான “அஞ்சான்” வெளிவரத் தயாராக இருக்கின்றது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதனை அடுத்து பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் இவர் அடுத்த படத்தில் நடிப்பது முடிவாகி இருக்கின்றது.

#TamilSchoolmychoice

மாதவன், நீது சந்திரா நடித்த ‘யாவரும் நலம்’ என்ற படத்தை பலர் மறந்திருக்க மாட்டார்கள். சிறந்த திகில் – மர்மப் படங்களில் அதுவும் ஒன்று. அதனை இயக்கியதன் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார்.

தெலுங்கில் ‘இஷ்க்’ என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மனம்’ படத்தையும் இயக்கியவர். ‘மனம்’ நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, அவரது மகன்  என மூன்று தலைமுறைகளைக் கொண்ட படமாகும்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் குமார் இயக்கும் படம் ஆரம்பமாக உள்ளது.

இதன் காரணமாகத்தான் விக்ரம் குமார் ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்றும் தகவல் ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன.