Home வாழ் நலம் பசி உணர்வு

பசி உணர்வு

1052
0
SHARE
Ad

hungryகோலாலம்பூர், பிப்.21- பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம்.

இருவருக்கும் பசி என்பது பிரச்சனை தரும் ஒன்று. இந்த பசி உணர்வு எப்படி தோன்றுகிறது. நமது ரத்தத்தில் சாதாரணமாக 80ல் இருந்து 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருக்க வேண்டும்.

இந்த குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ்தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் அளவை எடுத்துப்பார்த்தால் எல்லோருக்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும்.

#TamilSchoolmychoice

அதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுக்கோஸ் இருந்தால் அதை தேவையில்லை என்று நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 80-90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும். ரத்தத்தில் குளுக்கோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும். காஸ்ட்ரின் என்ற ஒரு ஹர்ர்மோன் தோன்றும்.

இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் பிரச்சனைதான்  பசி. குளுக்கோஸ் குறைவான ரத்தம் மூளைக்கு போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்குத்தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப்படுகிறது.

எதைப்பற்றியும் அதற்கு கவலையில்லை. தனக்கு வேண்டிய பங்க கச்சிதமான வந்து சேர்ந்து விட வேண்டும். அதிகமான ரத்தம் மட்டுமல்லாமல் தரமான குளுக்கோஸ் நிறைந்த ரத்தமே வேண்டும். அப்படி கிடைக்காத போது மூளை தெரிவிக்கும் இந்த எதிர்ப்புதான் லேசான மயக்கம், காதை அடைக்கிறது, கண் பஞ்சடைவது போன்றவை 8 மணி நேரம் சாப்பிடவில்லை.

தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றால் டீஹைட்ரஜன் தொடங்கும். அதனால் காதடைப்பு, மயக்கம் இன்னமும் அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களை இந்த குளுக்கோஸ் பிரச்சனை படாதபாடுபடுத்தும். அதனால் தான் அவர்களால் பசியை தாங்க முடிவதில்லை.