Home கலை உலகம் ரஜினியைத் தவிர யாரும் ‘சூப்பர் ஸ்டார்’ இல்லை – சூர்யா!

ரஜினியைத் தவிர யாரும் ‘சூப்பர் ஸ்டார்’ இல்லை – சூர்யா!

543
0
SHARE
Ad

Surya-cinefanzசென்னை, ஆகஸ்ட் 13 – “சூப்பர் ஸ்டார்” என்றால் அது ரஜினி சார் மட்டும்தான். வேறு யாரையும் அந்த பட்டத்தில் நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமான விஷயம், என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படம் இன்னும் இரு தினங்களில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாக வெளியாகிறது.

இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக கொச்சினுக்கு சென்றிருந்தார் சூர்யா. அப்போது அவரிடம், ‘இந்தியாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சூர்யாதான் என ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழாவில் சொன்னார்கள்.

#TamilSchoolmychoice

surya,இதற்கு பதிலளித்த சூர்யா, ‘இதெல்லாம் தப்புங்க. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் படம் பார்த்து வளர்ந்தவன் நான். இந்தியாவில் ஒரே ஒரு ‘சூப்பர் ஸ்டார்’தான். அது ரஜினி மட்டுமே.

அந்தப் பட்டப்பெயரில் வேறு யாரையும் நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக உள்ளது. தயவு செய்து என் படங்களை ரஜினி சார், கமல் சார் படங்களோடு ஒப்பிடாதீர்கள்,” என்றார் சூர்யா.