Home தொழில் நுட்பம் சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின!

சாம்சுங்கின் கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின!

523
0
SHARE
Ad

Galaxy Alpha

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – ஆப்பிள் ஐபோன் 6-க்குப் போட்டியாக சாம்சுங் நிறுவனம் தயாரித்து வந்த ‘கேலக்ஸி ஆல்ஃபா’ (Galaxy Alpha) பற்றிய அறிவிப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திறன்பேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் மகிழ்ச்சி தரும் வகையில் வெளியீடுகள் பல காத்து இருக்கின்றன. குறிப்பாக இந்த வருடத்தில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சுங் எத்தகைய திறன்பேசிகளை வெளியிட இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கின்றது. ஐபோன் 6 பற்றிய அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியான நிலையில், பல தொழில்நுட்பங்களை உள் அடக்கியதாக உருவாகப்பட்டுள்ள கேலக்ஸி ஆல்ஃபா பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

இம்முறை தொழில்நுட்பத்திற்கு மட்டும் அல்லாது புறத்தோற்றத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ள சாம்சுங் கண்கவரும் திறன்பேசி ஒன்றை வடிவமைத்துள்ளது. 115 கிராம் எடை கொண்ட இந்த இலகுவான ஆல்ஃபா திறன்பேசிகள் உலோகச் சட்டம் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருப்பதால் வழக்கமான திறன்பேசிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி சாம்சங் நிறுவனம் கூறியுள்ளதாவது:-

அண்டிரோய்டு 4.4 கிட்கேட்டில் இயங்கக்கூடிய இந்த திறன்பேசிகளின் செயல்திறன் அதிவேகம் கொண்டதாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் இதன் ‘குவாட்கோர்’ (Quad-Core) செயலி. இதன் முதன்மை நினைவகம் வழக்கத்திற்கு மாறாக 2 ஜிபி என்ற அளவில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் திரை ‘ஹெச்டி சூப்பர் அமொலெட்’ (HD Super AMOLED) தொழில்நுட்பம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 32ஜிபி உள் நினைவாக வசதி இருப்பதால் தனித்த நினைவாக அட்டைகளுக்கு அவசியம் இல்லை.

கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம், இதயத் துடிப்பை அளக்கும் கருவி மற்றும் சாம்சுங்கின் கியர் கைகடிகாரங்களை இணைப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கொண்டதாக இந்த திறன்பேசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 6 செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்ற ஆருடங்கள் கூறப்படுவதால், ஆல்ஃபா திறன்பேசிகள் அதற்கு முன்னதாகவே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.