Home தொழில் நுட்பம் இந்தோனேசியாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் சாம்சுங்!

இந்தோனேசியாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் சாம்சுங்!

509
0
SHARE
Ad

samsung-logo-500x252ஜகார்டா, ஆகஸ்ட் 19 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங், இந்தோனேசியாவில் செல்பேசிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆசிய அளவில் வளர்ந்து வரும் சந்தையாக இந்தோனேசியா கருதப்படுகின்றது. அங்கு தொழிற்சாலைகளை அமைக்கும் பட்சத்தில் ஆசியப் பகுதிகளுக்கான வர்த்தகம் மிக இலகுவான ஒன்றாக மாறிவிடும். சாம்சுங் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் சீனாவிலும், வியட்நாமிலும் முன்னரே இருப்பதால் ஆசிய அளவில் தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க முடியும் என சாம்சுங் திட்டமிட்டுள்ளது.

இது பற்றி அந்நிறுவனம் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

இந்தோனேசிய அரசுடன் இது பற்றிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்” என்று கூறியுள்ளது.

சம்சுங் உடன் ஏற்பட இருக்கும் இந்த ஒப்பந்தம் பற்றி இந்தோனேசிய அரசின் உயர் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் புதி தர்மதி கூறுகையில், “‘வெஸ்ட் ஜாவா‘ (West Java) பகுதியில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் 900,000 செல்பேசிகளை தயாரிக்க சாம்சுங் திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

எனினும் சாம்சுங் நிறுவனம் அமைக்க இருக்கும் இந்த தொழிற்சாலை செல்பேசிகளுக்கா அல்லது திறன்பேசிகளுக்கா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தோனேசியாவில் இளைஞர்கள் மத்தியில் வருவாய் அதிகமாக இருந்தும், அவர்களிடத்தில் திறன்பேசிகளுக்கான பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதனை சாதமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சாம்சுங் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.