Home வாழ் நலம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தாழம்பூ!

ரத்தத்தை சுத்தப்படுத்தும் தாழம்பூ!

1622
0
SHARE
Ad

Screw Pine Flowerஆகஸ்ட் 30 – தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும்  சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே  கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. தாழம் பூவின் நன்மைகளை பார்ப்போம்.

hala-flower-imageரத்தம் சுத்தமடைய:

#TamilSchoolmychoice

உடலில் சில சமயங்களில் பித்த நீர் இரத்ததில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த  ரத்தத்தை சுத்தப்படுத்த தாழம் பூவை காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

பசியை தூண்டக்கூடியது:

ஒரு சிலர் உடல்  நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப்படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு  பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும்.

detailவயிற்றுப் பெருமல் நீங்க:

உணவின் மாறுபாட்டாலும் நேரம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெருமலை  உண்டாக்குகிறது.  இதை போக்க தாழம் பூவை நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்.

ரத்த சோகை நீங்க:

ரத்த  சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறுசுறுப்பு இல்லாமல் எப்போதும் இருப்பார்கள். இந்தக்குறையை  போக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் குணமாகும்.

Screw Pine Flower,உடல்சூடு தணிய:

உடல் சூடானால் வெப்ப நோய்கலின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை  நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி  அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். அல்லது பூவை மணப்பாகு செய்து குடித்து வந்தால் உடல்சூடு குணமாகும்.

தாழம்பூவிலிருந்து தாழம்பூ தைலம் வடிக்கலாம். இந்த தைலம் தலைவலி, உடல் வலி உள்ளவர்களுக்கு மேல் பூச்சாக தடவினால் உடல் வலி  தலைவலி நீங்கும். இதை காதுவலிக்கும் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலிகள் குணமாகும்.