கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட மீசாட்-3பி கனவுத் திட்டம், சுமார் மூன்றாண்டு கால கடின முயற்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீசாட் -3பி பற்றி மீசேட் செயற்கைக்கோள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பால் பிரௌன் கென்யான் கூறுகையில், “மீசாட் விண்ணில் ஏவிய மீசாட்-3பி, மலேசியாவின் அதி நவீன செயற்கைக்கோள் ஆகும்” என்று கூறியுள்ளார்.
இந்த புதிய செயற்கைக்கோள் ஆனது மீசாட் (MEASAT) மற்றும் ‘அரியான்பேஸ்’ (Arianespace) ஆராய்ச்சிக் குழுவின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலேசியா விண்ணில் ஏவிய மீசாட் 1, 2 மற்றும் 3-ஐ காட்டிலும் மீசாட்-3பி மிகப் பெரியதும், நவீனத்துவம் மிக்கதுமாக கருதப்படுகின்றது.
மீசாட் -3பி செயற்கைக்கோள் மூலமாக ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஊடகத் தொடர்பு மற்றும் ஒளி பரப்பு சேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.