Home தொழில் நுட்பம் அனைத்து திறன் பேசிகளுக்கும் மைக்ரோசாப்ட்டின் பொதுவான கருவிகள்

அனைத்து திறன் பேசிகளுக்கும் மைக்ரோசாப்ட்டின் பொதுவான கருவிகள்

543
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 17 – முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மென்பொருட்கள் மட்டும் அல்லாது கணிப்பொறி மற்றும் செல்பேசிகளுக்கான கருவிகளையும் அவ்வபோது வெளியிட்டு வருவது வாடிக்கையான ஒன்று. அவ்வாறு தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருவிகள் சில பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அனைத்து திறன்பேசிகளுக்கும் பொதுவான விசைப்பலகை (Universal Mobile Keyboard):

UMK_comp_black2-730x438

#TamilSchoolmychoice

விண்டோஸ் மட்டும் அல்லாது அனைத்துவிதமான திறன்பேசிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு பொதுவான விசைப்பலகை ஒன்றை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பிட்டு கூறவேண்டும் என்றால் ஆப்பிளின் ஐஒஎஸ் மற்றும் அண்டிரொய்டு இயங்குதளங்கள் கொண்ட திறன்பேசிகளிலும் இயங்கும் வகையில் இந்த விசைப்பலகை இருக்கும். அதோடு மட்டும் அல்லது ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இவ்வகை விசைப்பலகைகளை கணினி மற்றும் மடிக்கணினிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

பயனர்கள் இந்த விசைபலகையை தங்கள் கைப்பைகளில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவில் மிகச் எளிதான ஒன்றாகவே இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இதற்கு ‘மின்விசை’ (Charge) சேர்ப்பதும் எளிது. வரும் அக்டோபர் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவில் சந்தைப்படுத்தப்படும் இந்த விசைப்பலகைகள் விரைவில் உலகளாவிய சந்தைகளுக்கு வரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வில்லை 79.95 டாலர்கள் ஆகும்.

‘ஆர்க் டச் ப்ளூடூத் சுட்டி’ (Arc Touch Bluetooth Mouse)

Microsoft-Arc-Touch-Bluetooth-Mouse

ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய இந்த புதிய சுட்டிகளும் பயர்களின் கவனத்தை ஈர்க்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. சாதாரண சுட்டிகளைக் காட்டிலும் பிரத்தேய வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த சுட்டிகள் ப்ளுட்டூத் 4.0 தொழில்நுட்ப இணக்கத்தன்மையை கொண்டது. நாளை முதல் விற்பனைக்கு வரும் இந்த சுட்டிகளின் விலை 69.95 டாலர்கள் ஆகும்.

ஆர்க் சுட்டி போல் திறன்பேசிகளுக்கென பிரத்யேகமான சுட்டி ஒன்றையும் மைக்ரோசாப்ட் தயாரித்துள்ளது. திறன்பேசிகளுடன் வயர்லெஸ் இணைப்பை ஏற்படுத்தி பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுட்டியின் விலை 29.95 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.