மணிப்பூர், சந்தல் மாவட்டத்தில் உள்ள, பல்லல் பகுதியில், காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு வந்த, மூன்று வாகனங்களை சோதனை செய்த போது, அதில், மியான்மரிலிருந்து கடத்திவரப்பட்ட, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ராணுவ மக்கள் தொடர்பு அலுவலர், அஜய் சவுத்திரி, அவரது உதவியாளர், பாப்லு மற்றும் பிரோஜென் திரோசிங் உட்பட, ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Comments