லண்டன், அக்டோபர் 2 – உயிர் வாழத் தேவையான பிராணவாயுவை (ஆக்சிஜனை) சேமித்து, தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான புதிய வகை பொருளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது தங்களது இலக்கை எட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த விஞ்ஞானிகள் கூறியதாவது,
“படிகத்தன்மை கொண்ட அந்த பொருளின் அணுக்களில், பிராணவாயவு நிரப்பப்பட்டு, தேவைப்படும் போது அதில் உள்ள வாயுவைப் பயன்படுத்தி்க்கொள்ளலாம்.
ஒரு தேக்கரண்டி அளவுள்ள இந்த பொருள், ஒரு அறையில் உள்ள மொத்த பிராணவாயுவையும் உறிஞ்சும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.