Home தொழில் நுட்பம் விண்வெளியில் ஆபாசப்படம் – விஞ்ஞானிகள் ‘புதிய முயற்சி’!       

விண்வெளியில் ஆபாசப்படம் – விஞ்ஞானிகள் ‘புதிய முயற்சி’!       

839
0
SHARE
Ad

pornhubமாண்ட்ரீல், ஜூன் 12 – கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கும் வெளியாகும் ஆபாச வலைத்தளமான ‘பார்ன்ஹப்’ (Porn Hub) விண்வெளியில் மனிதர்கள் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொள்ளச் சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை விஞ்ஞானிகள் குழு கொண்டு ஆராய்ந்து வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் முதல் முயற்சியாகப் புவி ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் நடிகர்-நடிகையை வைத்து ஆபாசப் படம் ஒன்றை எடுக்க இருக்கிறது.

இது தொடர்பாக அந்த வலைத்தளம் வெளியிட்டுள்ள தகவலில், “விண்வெளியில் ஆபாசப் படம் என்பது எந்தளவில் சாத்தியம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் இது மிகப் பெரும் பணி, இதனை நாங்கள் தொடங்க இருக்கின்றோம். இதற்காகப் படக் குழுவினர் அனைவருக்கும் பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கேமரா முதல் படத்திற்கான அனைத்துக் கருவிகளும் விண்வெளியில் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட இருக்கின்றன. இதற்கான ஒட்டுமொத்தச் செலவையும் எங்கள் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ள இயலாது. அதனால் எங்கள் பார்வையாளர்களிடம் நிதியுதவி கோரியுள்ளோம்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிப் படத்தில் நடிகை ஈவா லோவியா மற்றும் நடிகர் ஜானி சின்ஸ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வந்தாலும், விமர்சகர்கள் பலர் இதனை எதிர்க்காமல் இல்லை. எனினும், இதுவரை பூமியைத் தாண்டி அண்ட வெளியில், மனித சமூகம் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் மட்டுமே செய்யப்பட்டு வந்தன. அதில் மற்றொரு முயற்சியாகப் பாலியல் ஆராய்ச்சியும் செய்ய இருப்பது விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மனிதர்களின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.