Home நாடு கோலாலம்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – புவியியல் ஆராய்ச்சியாளர் தகவல்

கோலாலம்பூரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – புவியியல் ஆராய்ச்சியாளர் தகவல்

810
0
SHARE
Ad

KUALA-LUMPUR-khalzuriகோலாலம்பூர், ஜூன் 12 – சபாவைத் தொடர்ந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் துணைப் பேராசிரியர் முஸ்தபா கமல் சூயிப் தி மலேசியன் இன்சைடர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “பண்டைய காலத்தில் கோளாறான புவி மண்டலங்களின் மையப்புள்ளிகள் கோலாலம்பூருக்கு மிக அருகில் இருப்பது தான் அதற்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தக் கோளாறான நிலத்தட்டுகளை, தற்போது இயங்கு நிலையில் இருக்கும் நிலத்தட்டுகள் இயங்கு நிலைக்குக் மாற்றி வருகின்றன. அது தான் பிரச்சனைக்குக் காரணம். குறிப்பாகக் கோலாலம்பூர் நகரைச் சுற்றி நிறைய கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை”

#TamilSchoolmychoice

“தீபகற்ப மலேசியா மிகவும் பாதுகாப்பானது காரணம் அது பசிபிக் நெருப்பு வளையத்திற்குத் தூரத்தில் உள்ளது என்று பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. ஆனால் அண்மையக்  காலத்தில், இந்த கோளாறான நிலத்தட்டுகள் இயங்குவதன் காரணமாக இங்கே நம் காலுக்கு அடியில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்றும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

“மலேசியாவைச் சுற்றி ஏராளமான இயங்குநிலையில் உள்ள நிலத்தட்டுகளின் எல்லைகள் மற்றும் சுண்டா அடுக்குகள் உள்ளன. அதன் மேல் தான் இந்த நாடு அமைந்துள்ளது.”

“தீபகற்ப மலேசியா அந்த அடுக்கின் மையத்தில் அமைந்துள்ளது. அதற்குப் பெயர் சுண்டாநிலம் (Sundaland). தீபகற்ப மலேசியாவில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் அனைத்தையும் அது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றது.”

“விரைவில் அல்லது சில காலங்களுக்குப் பிறகு, அது அந்த அதிர்வுகளை வெளியேற்றும் அப்போது கோளாறான பழைய நிலத்தட்டுகள் உடையும். அது நிலநடுக்கத்திற்கு வழி வகுக்கும்” என்ற அதிர்ச்சித் தகவலையும் முஸ்தபா வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக முஸ்தபாவும், அவரது குழுவினரும் இந்தக் கோளாறான நிலத்தட்டுகளைக் கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டு வாக்கில் பகாங் மாநிலம் கெந்திங் மலைக்கு அருகில் உள்ள புக்கிட் திங்கியில் கண்டறிந்தார்கள்.

புக்கிட் திங்கியில் இதுவரை 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஆனால் அது எதிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.