Home நிகழ்வுகள் ஜொகூரில் இலக்கிய நிகழ்ச்சி

ஜொகூரில் இலக்கிய நிகழ்ச்சி

579
0
SHARE
Ad

johorஸ்கூடாய், பிப்.25- ஜோகூர் மாநிலத் தமிழ் இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் 28.2.2013 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்கூடாயில் தமிழக இலக்கியவாதிகள் இருவரின் இலக்கிய உரைகள் 96ஏ ஜாலான் ரொங்கேங்19 தாமான் நேசா, தமிழ் இலக்கிய பனிமலையில் நடக்கவுள்ளது.

கடலூரைச் சேர்ந்த தேவநேயப் பாவாணர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தமிழியப் புலவர் பேராசியர் கதிர் முத்தையனார், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முதல்வரும் பாவேந்தர் விருது பெற்றவருமான முனைவர் மு.பி.பாலசுப்ரமணியம் இணைந்து இலக்கியப் படையல் செய்யும் வகையில்  ‘இலக்கியச் சாரல்’ என்ற இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமாக நிகழும் இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பற்றாளர்கள், தமிழாசிரியர்கள், இலக்கிய அபிமானிகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, தமிழ்மணி சி.வடிவேலு 013-7791980 மற்றும் சு.ரவி 013-7689379 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.