Home இந்தியா இந்தியாவின் 101வது ஆகாசவாணம் பிஎஸ்எல்வி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் 101வது ஆகாசவாணம் பிஎஸ்எல்வி, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

540
0
SHARE
Ad

pslvசென்னை, பிப்.26- நிலம், நீர் தட்பவெப்பம், கடல் பாதுகாப்புக்காக ஏவப்பட்ட இந்தியாவின் 101வது விண்கலம் (ராக்கெட்) பி.எஸ்.எல்.வி சி,20 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

6 நாடுகளின் 7 செயற்கைக்கோள்களுடன் 22வது நிமிடத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விண்கலம்  செலுத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

விண்கலம் செலுத்துவதற்கான 59 மணி நேர கணக்கெடுப்பு கடந்த 23ம் தேதி காலை 6.56க்கு தொடங்கியது. தொடர்ந்து முதல் கட்ட பரிசோதனைகள், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.

நேர கணக்கெடுப்பு நேற்று மாலை 6.01 க்கு நிறைவு பெற்றது.  இதையடுத்து பி.எஸ்.எல்.வி சி,20 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தீ பிழம்புகளை கக்கியபடி விண்கலம் கிளம்பியதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர்.

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி யின் 23வது  விண்கலம் ஆகும்.

விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு சில நொடிகளில் மக்கள் கண்களை விட்டு வானில் மறைந்தது. அதற்கு பிறகு விண்கலம் செல்லும் திசை குறித்து விண்வெளி ஆய்வு நிலையத்தின் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

அரங்கில் குவிந்திருந்த விஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளின் உறவினர்களும் விண்கலம்  ஒவ்வொரு கட்டமாக வெற்றிகரமாக முன்னேறி செல்வதை பார்த்து கைத்தட்டி வரவேற்றனர்.

செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டபோது எழுந்து நின்று எல்லோரும் உற்சாகமாக கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஆகாசவாணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையொட்டி விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். விண்கலம் ஏவும் முயற்சி வெற்றி பெற்றது இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றொரு சகாப்தம் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.