Home வாழ் நலம் தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய்!

தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய்!

9163
0
SHARE
Ad

cardomonஜனவரி 6 – வாசனைத் திரவியங்களில் ஏலக்காயை அரசி என்று சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி. ஏலக்காயை உணவின் ருசியை அதிகமாக்கும்.

செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சனைகளிலிருந்து ஏலக்காய் நிவாரணம் தருகிறது.

எனினும் இதை அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது.

#TamilSchoolmychoice

cardamomநான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும். வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும்.

நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும்.

விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும்.

cardamom-749மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும். மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், “ஏலக்காய் டீ” குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் தலைவலி, வாந்தி, வாந்தி, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய நோய்களை உடனே குணமாக்கும்.