Home நாடு அமைச்சர் சுப்ரமணியத்தின் பத்திரிக்கை செயலாளர் சிவம் கார் விபத்தில் மரணம்

அமைச்சர் சுப்ரமணியத்தின் பத்திரிக்கை செயலாளர் சிவம் கார் விபத்தில் மரணம்

651
0
SHARE
Ad

pa.a.-sivamகோலாலம்பூர், பிப்.28- மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்  எஸ். சுப்பிரமணியத்தின் பத்திரிக்கை செயலாளர் திரு.பி. சிவம் கார் விபத்து ஒன்றில் காலமானார்.

டாக்டர் சுப்ரமணியத்தின் பத்திரிக்கை செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 32 வயதே ஆன இளைஞரான பி.சிவம்,  துடிப்புடன் பணியாற்றியவர் என்பதுடன் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகி அனைவரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்றவர்.

சுங்கை சிப்புட்டை பிறப்பிடமாகக் கொண்ட அவர், ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளராகவும் அவர் திகழ்ந்தார்.

#TamilSchoolmychoice

பத்திரிக்கைச் செயலாளராக டாக்டர் சுப்ரமணியத்தின் அலுவலகத்தில் சேருவதற்கு முன்னாள் அவர் மலேசிய வானொலியின் தமிழ்ப் பகுதியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகிவிட்ட சிவத்திற்கு ஒரு குழந்தையும் உண்டு.

அவரது நல்லுடல் தற்போது தம்பின் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.