சுபாங், பிப்ரவரி 13 – தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவிலும், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியிலும் வெற்றிகரமாக இயங்கி வரும் பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடை தனது மூன்றாவது கிளையை சுபாங் விமான நிலையத்தில் திறந்துள்ளது.
சுபாங் ஸ்கைபார்க்கில் அமைந்துள்ள பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடையின் முகப்புத் தோற்றம்
உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்கான விமான நிலையமாகவும், தனியார் விமானங்களுக்கான மையமாகவும் சுபாங்கில் இயங்கிவரும் ஸ்கைபார்க் விமான முனைய வளாகம் அண்மையக் காலமாக பயணிகளிடையே பிரபலமாகி வருகின்றது. விமான சேவைகளின் எண்ணிக்கையும் கட்டம் கட்டமாக கூடி வருகின்றது.
இந்த விமான நிலையத்தில் G-25 என்ற எண் கொண்ட கடையில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திறப்பு விழா கண்ட பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடையை அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான ஹாஜி ஷாகுல் ஹமீட்டின் தாயார் சாஹார் பானு அம்மையார் திறந்து வைத்தார்.
ஷாகுல் ஹமீட்டின் தாயார் சாஹார் பானு அம்மையார் பம்பாய் ஜூவெல்லரி கடையை திறந்து வைக்கிறார்
திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் – டத்தோ ரசூல், டான்ஸ்ரீ குமரன், டாக்டர் நாதர் கான், டத்தோ சைட் இப்ராகிம், ஆகியோர்..
தனது புதிய கடைத் திறப்பு விழா குறித்து கருத்துரைத்த பம்பாய் ஜூவெல்லரியின் நிர்வாக இயக்குநர் ஹாஜி ஷாகுல் ஹமீட், தங்களின் நகை வணிகத்தை விரிவாக்கும் நோக்கத்திலும், அதே சமயம் இந்தியர்களுக்கு மட்டும் என்றில்லாமல் மற்ற இனத்தவர்கள், வெளிநாட்டவர்களையும் கவரும் வண்ணம் புதிய மையங்களைத் திறக்க வேண்டும் என்ற இலக்கோடும் தங்களின் நிறுவனம் சுபாங் ஸ்கை பார்க் விமான நிலையத்தைத் தேர்ந்தெடுத்து இந்தக் கடையைத் திறந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சுபாங் ஸ்கை பார்க் விமான நிலைய பம்பாய் ஜூவெல்லரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதம் விதமான நகைகளைப் பார்வையிடும் வெளிநாட்டுப் பயணிகளில் சிலர்…
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சுபாங் ஸ்கைபார்க் கடையில் திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அதன்படி 916 தர அளவு தங்க நகைகளை வாங்குபவர்களுக்கு செய்கூலியில் 50 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி தரப்படுவதாகவும், வைரம் மற்றும் 9 கேரட் தர அளவு கொண்ட தங்க நகைகளுக்கு விற்பனை விலையிலிருந்து 50 சதவீதம் வரை சிறப்புக் கழிவுகள் வழங்கப்படுவதாகவும் ஷாகுல் ஹமீட் தெரிவித்தார்.
இந்த சிறப்பு சலுகைகள் அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
திறப்பு விழாவிற்கு வருகை தந்த அலி மாஜூ உணவக குழுமத்தின் தலைவர் ஜவகர் அலி(இடது) மற்றும் டத்தோ நிஜாம் (நடுவில்) ஆகியோருடன் ஷாகுல் ஹமீட்…
மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் விதமாக நகை சேமிப்புத் திட்டங்கள் சிலவற்றையும் தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அது குறித்த கூடுதல் விவரங்களை கீழ்க்காணும் தொலைபேசி அல்லது இணையத் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் ஷாகுல் ஹமீட் மேலும் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள், திறப்பு விழா வருகையாளர்களுடன் பம்பாய் ஜூவெல்லரி நிர்வாக இயக்குநர் ஹாஜி ஷாகுல் ஹமீட்….
இந்த புதிய நகைக் கடை திறப்பு விழாவில் பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
அவர்களில் முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன், அலி மாஜூ உணவக குழுமத்தின் தலைவர் ஜவகர் அலி, இந்திய நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் டத்தோ ரசூல், டத்தோ சைட் இப்ராகிம், டத்தோ நிஜாம், மலாயாப் பல்கலைக் கழகத்தின் சூழியல் துறை விரிவுரையாளர் டாக்டர் நாதர் கான், வழக்கறிஞர் டத்தோ சமான், கொப்பத்தா குழுமத் தலைவர் டத்தோ இப்ராகிம் ஆகியோரும் அடங்குவர்.
மேலும் பல வாடிக்கையாளர்களும், வணிக நண்பர்களும் இந்த கடைத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் தொடர்புக்கு: