Home நாடு கோலாலம்பூரில் சரத்குமார்! பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடைக்கு வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூரில் சரத்குமார்! பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடைக்கு வருகை (படக் காட்சிகள்)

757
0
SHARE
Ad

கோலாலம்பூர், நவம்பர் 16 – மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்று மாலை 5.00 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியா பகுதியில் உள்ள பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடைக்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்.

Sarathkumar received by Bombay Jewellery management

பம்பாய் ஜூவெல்லரி கடைக்கு வருகை தரும் சரத்குமாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் கடை நிர்வாகத்தினர்…

#TamilSchoolmychoice

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரைக் காண திரளான மக்கள் கூட்டம் லிட்டல் இந்தியா பகுதியில் திரண்டது.

View of Bombay Jewellery Brickfields

பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடையின் முன்னால் சரத்குமாரைக் காண திரண்ட மக்கள் வெள்ளம்….

நட்பின் அடிப்படையில், தனக்கு  நண்பரான ஹாஜி சாகுல் ஹமீட் நடத்தும் பம்பாய் ஜூவெல்லரி நகைக் கடைக்கு சரத் குமார் வருகை தந்தார்.

Bombay Jewellery owner giving a momento to Sarath Kumar

சரத்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கும் பம்பாய் ஜூவெல்லரி உரிமையாளர் ஹாஜி சாகுல் ஹமீட்..

கடையின் உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்த மக்களிடையே கைகுலுக்கியும், புகைப்படங்கள் எடுத்தும், சரத் குமார் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகினார்.

சரத்குமார், ஏறத்தாழ அரை மணி நேரம் பம்பாய் ஜூவெல்லரி கடையில் இருந்தார். தன்னைக் காணவும், தன்னுடன் கைகுலுக்கவும், தன்னுடன் தன்முகப் படம் (செல்ஃபி) எடுக்கவும் முண்டியடித்துக் கொண்டு வந்த அனைவருக்கும் முகம் சுளிக்காமல், நடிகர், அரசியல்வாதி என்ற பந்தா எதுவும் இல்லாமல் சகஜமாக சரத்குமார் ஒத்துழைப்பு கொடுத்தார்.

Sarathkumar in Bombay Jewellery Little India

தன்னைக் காண கடைக்குள் திரண்டு வந்த மக்களுடன் சரத்குமார்…