Home இந்தியா பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!

பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!

571
0
SHARE
Ad

Sonia, Rahulபுதுடெல்லி, நவம்பர் 16 –  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “ஆதர்ஷ் கிராம் யோஜ்னா” திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.

இருவருமே உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமங்களை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார் பிரதமர் மோடி.

அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112ஆவது பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

தற்போது மோடியின் அறிவிப்பை அடுத்து சச்சின் டெண்டுல்கர் தொடங்கி கனிமொழி வரை அனைத்து எம்.பி.க்களும் கிராமங்களை தத்தெடுத்து வருகின்றனர். தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் அனைத்துவித உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் உள்ள உருவா என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.

இதேபோல் அமேதி தொகுதியில் உள்ள ஜக்திஷ்பூர் கிராமத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தத்தெடுத்துள்ளார்.