Home வாழ் நலம் நுரையீரலை சுத்தப்படுத்தும் சில உணவுகள்!

நுரையீரலை சுத்தப்படுத்தும் சில உணவுகள்!

1812
0
SHARE
Ad

Fruitsபிப்ரவரி 16 – பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

கடும் சுவாசப்பாதை கோளாறு, வயது முதிர்ந்தோரின் இறப்புகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் சில உணவுகளை பார்க்கலாம்.

இந்த உணவுகள் நுரையீரல் நலனை ஊக்குவிப்பதோடு, காற்று மாசுபாடு மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ள, இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

#TamilSchoolmychoice

_xmascustoms_sm8மாதுளைப் பழங்கள் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது.

ஆப்பிள்களில் வைட்டமின் ஈ, பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை.

கேரட் சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால், நுரையீரல் நலனைப் பேணுவதில் மிகவும் உதவுகின்றன.

nutsபாதாம் மற்றும் முந்திரி உள்ளிட்ட பருப்புகள் உடற்கூறுகளைத் தடுப்பதுடன், கொழுப்பு அமிலங்களைக் தடுக்கிறது. இவை நுரையீரலை சுத்தம் செய்யும் சத்தான உணவாகும். இவற்றில் அடங்கியுள்ள அதிக அளவு புரதம் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. புகைப்பிடிப்போர் உண்ண வேண்டிய ஒரு அருமையான பழம் இது. நுரையீரல் சுவாசம் நன்கு உள்ளிழுக்கும் திறனை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.