கோலாலம்பூர், மார்ச்.4- கணினிகளில் ஏற்படும் வைரஸ் தாக்கங்களிலிருந்து அவற்றினை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறந்த நச்சு மென்பொருள் எதிர்ப்பி (ஆன்டிவைரஸ்) மென்பொருட்களில் அவாஸ்ட்டும்(Avast) ஒன்றாகும்.
உலகெங்கிலும் சுமார் 170 மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்படும் இம்மென்பொருளின் புதிய பதிப்பான Avast 8.0 ஆனது புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.
இதன்படி புதிய பயனர் இடைமுகம், மென்பொருட்களை புதுபிக்கச் செய்யும் வசதி, இணைய உலாவிகளின் வேகத்தினை மேம்படுத்தல், விளம்பரங்களை தடைசெய்தல் மற்றும் ‘ஸ்கிரீன் சேர்வர்’ களை மாற்றியமைத்தல் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.