அவரது மேலாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்தவர் கருப்பன். இவர் சேலம் துணை நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள 75 சென்ட் நிலத்தை வாங்கினார்.
இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை திரைப்பட இசையமைப்பாளர் மணி சர்மா மற்றும் அவரது மேலாளர் ரகுராமன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக கருப்பன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்டால் இருவரும் மிரட்டல் விடுப்பதாகவும் கூறி வந்தார்.
கானத்தூர் போலீசிலும் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
மேலும், ரகுராமனையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணி சர்மாவை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். இசை அமைப்பாளர் நில அபகரிப்பு புகாரில் சிக்கி தலைமறைவாக இருப்பது மற்றும் அவரது மேலாளர் கைது செய்யப்பட்டிருப்பதும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.